ஷிலாங்:
குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என அசாம் முதல்வரும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கொனார்டு சங்மா எச்சரித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே அசாம் கன பரிஷத் கட்சி, அக்கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டது.
இது குறித்து தேசிய மக்கள் கட்சித் தலைவரும் அசாம் மாநில முதல்வருமான கொனார்டு சங்மாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,”குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரவை தீர்மானத்தை ஏற்கெனவே மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம்.
எந்த சூழ்நிலையிலும் குடியுரிமை சட்டதிருத்தம் கொண்டு வருவதை ஏற்றுக் கொள்ளமாட்டோம். இதற்கான எதிர்ப்பை நாங்கள் மத்திய அரசிடம் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளோம்.
அதற்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகவும் தயங்கமாட்டோம்” என்றார்.