காதலிக்காக தனது பதவியை துறக்க ரஷ்ய மன்னர் 5ம் சுல்தான் முகமது முடிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய மன்னர் தனது பதவியை துறப்பது இதுவே முதல் முறை.

malasia

மலேசியாவில் மன்னர் ஆட்சியின் கீழ் கூட்டாட்சி அரசு இயங்கி வருகிறது. அந்நாட்டின் 15வது மன்னராக சுல்தான் முகமது கடந்த 2016ம் ஆண்டு முடிசூடினார். அவர் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மகாதீர் பின் முகமது அந்நாட்டின் பிரதமராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் 49 வயதான மன்னர் சுல்தான் முகமது ரஷ்யாவை சேர்ந்த ‘மிஸ் மாஸ்கோ’ பட்டம் வென்ற 25வயதான அழகியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 2017ம் ஆண்டு சுல்தான் முகமதுக்கும் அவரது இளம்வயது காதலி ஒக்சானா வோயவோடினாவிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அதற்கான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

malasia

இதனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய சுல்தான் தனது மன்னர் பட்டத்தை துறைப்பார் என கூறப்பட்டு வந்தது. அதனை மெய்ப்பிக்கும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை தனது மனனர் பதவியில் இருந்து சுல்தான் முகமது விலகியுள்ளார். இதனை மலேசியா மன்னரின் அரண்மை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனினும், ஏன் மன்னர் தனது பதவியை விட்டு விலகினார் என காரணம் கூறப்படவில்லை.

இருப்பினும் காதல் மனைவிக்காகதான் தனது அரசப்பதவியை சுல்தான் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டு வருகிறது. 1957ம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததில் இருந்து மலேசியா வரலாற்றில் ஒரு மன்னர் பதவியை தாமாக இழப்பது இதுவே முதல் முறையாகும்.