மராவதி

காராஷ்டிர மாநில கல்வி அமைச்சர் தன்னிடம் கேள்வி கேட்ட மாணவரை கைது செய்யுமாறு காவலர்களிடம் உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநில கல்வி அமைச்சராக பதவியில் இருப்பவர் வினோத் தாவ்டே.   இவர் சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அமராவதி நகருக்கு வந்திருந்தார்.  அப்ப்போது அவர் அமராவதியில் உள்ள சிவாஜி சிக்‌ஷான் சன்ஸ்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வந்தார்.   அங்கு ஜர்னலிசம் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் கலந்துக் கொண்டார்.

விழா முடிந்து அவர் திரும்பிச் செல்லும் போது கலந்துரையாடலில் கேள்வி கேட்க முடியாத சில மாணவர்கள் அவரை சுற்றி நின்று கேள்விகள் எழுப்பினார்கள்.   அப்போது பிரசாந்த் ராத்தோட் என்னும் மாணவர் மகாராஷ்டிராவில் கல்விக் கட்டணம் அதிகமாக உள்ளதாகவும் மகாராஷ்டிராவில் இலவச கல்வி அறிமுகப்படுத்தப் படுமா எனவும் கேட்டுள்ளார்.

அந்த கேள்வியினால் கோபம் அடைந்த அமைச்சர் கட்டணம் செலுத்த முடியவில்லை எனில்  படிபைநிறுத்தி விட்டு வேலைக்கு செல்ல வேண்டுமென கோபத்துடன் பதில் அளித்தார்.  அத்துடன் தன்னுடன் வந்த காவலர்களிடம் அந்த மாணவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.    இந்த நிகழ்வை யுவராஜ் தபாட் என்னும் மாணவர் மொபைலில் வீடியோ படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

இதைக் கண்ட அமைச்சர் வினோத் தாவ்டே மேலும் கோபம் அடைந்தார்.  வீடியோ எடுத்த மாணவரையும் கைது செய்து வேனில் ஏற்ற உத்தரவிட்டார்.   அதை ஒட்டி அவர் வேனில் ஏற்றப்பட்டதால் சுற்றி இருந்த மாணவ்ர்கள் வேனை சூழ்ந்துக் கொண்டுள்ள்னர்.   வேன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.   அதன்  பிறகு மாணவரை விடுவித்த பிறகு மற்ற மாணவர்கள் வழி விட்டனர்.

இந்த தகவல் பரவவே அமைச்சரிடம் செய்தியாளர்கள் அமைச்சரிடம் விளக்கம் கேட்டனர்.  அதற்கு அமைச்சர் வினோத் தாவ்டே, “நான் எப்போதுமே மாணவர்களுடன் பேசிக் கொண்டிருப்பேன்.  அவ்வாறு பேசும் போது சிலர் வீடியோ எடுத்தனர்.  அதனால் நான் அவர்களிடம் நாம் உள்ளே சென்று வீடியோ எடுப்போம் என கூறினேன்.  காவல்துறையினர் வீடியோ எடுக்க ஒரு மாணவனை உள்ளே அழைத்து வந்தனர்’ என நடந்ததற்கு நேர் மாறாக தெரிவித்துள்ளார்.