ராமையாபட்டினம், ஆந்திரா
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ராமையாபட்டினத்தில் ஆசியாவின் மிகப் பெரிய தன்னிறைவு தொழிற்சாலை ரூ.350 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.
தன்னிறைவு தொழிற்சாலை என்பது அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாகும். ஒரே தொழிற்சாலை இவ்வாறு அமைவது இல்லை. சில தொழிற்சாலைகள் சேர்ந்து ஒரு தொழில் நகரம் உருவாக்கும் போது இவ்வாறு அமைகிறது. இவ்வாறு ஒரே தொழிற்சாலை கடந்த 2017 ஆம் வருடம் ஒரிசாவில் அமைக்கவிருந்த போஸ்கோ ஸ்டீல் தொழிற்சாலை ஆகும். இது ரூ. 83750 கோடி செலவில் அமைக்கப்பட இருந்தது. ஆனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.
இந்தோநேசியாவை சேர்ந்த ஆசியா பல்ப் அண்ட் பேப்பர் குழுமம் உலகில் காகித உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஆந்திராவில் தொழில் தொடங்க விண்ணப்பித்திருந்தது. இந்தியாவில் கடந்த 4-5 வருடங்களாக காகித உற்பத்தித் தொழில் மிகவும் மந்தமான நிலையில் உள்ளது. ஆகவே இந்த விண்ணப்பத்தை ஆந்திர அரசு அங்கீகரித்துள்ளது.
ஆசியா பல்ப் அண்ட் பேப்பர் குழுமம் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமையா பட்டினத்தின் கடற்கரை ஓரத்தில் தனது தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதற்காக கடற்கரை ஓரமாக 2500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த தொழிற்சாலை ரூ.24500 கோடிசெலவில் அமைக்கப்பட உள்ள தன்னிறைவு தொழிற்சாலை ஆகும்.
இந்த தொழிற்சாலைக்கு அனைத்து துறைகளின் ஒப்புதல் கிடைக்க ஒரு வருடங்கள் அகலாம் என கூறப்படுகிறது. அதன் பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன. இந்த காகித ஆலை அமைக்கப்பட்டால் சுமார் 4000 நேரடி வேலை வாய்ப்பும் 10000 மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அத்துடன் இந்த தொழிற்சாலை ஆசிய கண்டத்தின் முதலாம் பெரிய தன்னிறைவு தொழிற்சாலையாக அமைய உள்ளது.