புதுடெல்லி:
உருளைக்கிழங்கை நல்ல விலைக்கு விற்க முடியாமல் பஞ்சாப் விவசாயிகள் தவிப்பதாகக் கூறி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
குர்ஜித் சிங் அவுஜ்லா மற்றும் சுனில் ஜக்கார் உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் இந்த விவகாரம் தொடர்பாக மோடி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
அதன்பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பஞ்சாப் விவசாயிகளின் பிரச்சினைகளை மோடி தலைமையிலான மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை. விவசாயிகளின் குறைகளை கேட்காமல், கவுதம் அதானிக்கும், அனில் அம்பானிக்கும் ஆதரவாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பஞ்சாபில் உருக்கிளைங்கு உற்பத்தி செய்யப்பட்டு முடங்கிக் கிடக்கிறது. நல்ல விற்பனைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்க்கை நிலை உயர மத்திய அரசு விரைந்து செயல்படவேண்டும்” என்றார்.