மதுரை:
தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் 18 தொகுதிக்கும் எப்போது தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உயர்நீதி மன்றம் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் எடப்பாடிக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்தால், அதிமுக கொறடா வேண்டுகோளை ஏற்று சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப் பட்டனர். இது தொடர்பான வழக்கிலும், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியே என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், காலியாக 18 தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இதுவரை தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடாத நிலையில், திருமங்கலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில், வழக்கு தொக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 18 தொகுதி களுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஜன., 22ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
[youtube-feed feed=1]