திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தில் சபரிமலை பிரச்சினை தொடர்பாக நடந்த கலவரத்தை படம் பிடித்த தனியார் தொலைக்காட்சி வீடியோகிராபர் ஷஜிலா அலி பாத்திமா சங் பரிவார் அமைப்பினரால் தாக்கப்பட்டார்.


பிந்து மற்றும் கனகதுர்கா ஆகிய 2 பெண்கள் சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்ததையடுத்து, தூய்மைப்படுத்துவதற்காக கோயில் அடைக்கப்பட்டது.
இதனையடுத்து கேரளாவில் பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. கல் வீச்சில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், கலவரத்தை படம் பிடித்துக் கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி வீடியோகிராபர் ஷஜிலா அலி பாத்திமாவை சங்பரிவார் அமைப்பினர் கடுமையாக தாக்கினர்.

இது குறித்து அவர் கூறும்போது, பத்திரிகையாளர்களை தாக்கிக் கொண்டிருந்த பாஜக தொண்டர்களை படம் பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த ப்ளக்ஸ் போர்டை கிழித்துப் போட்ட அவர்கள், என் மீது தாக்குதல் நடத்தினர்.
அடியை வாங்கிக் கொண்டே அந்த காட்சியை  சமூக வலைதலங்களில் பகிர்ந்தேன்.

பாஜகவினரைப் பார்த்து நான் பயப்படப் போவதில்லை. தொடர்ந்து பாஜக போராட்டத்தை படம் பிடிப்பேன். பொது இடத்தில் பெண்களை பார்க்கவே அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். இதன்பின்னர், பாஜக தலைவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்றார்.