திருவனந்தபுரம்:
வேறு ஒருவர் பயன்படுத்திய புடவையை திருவனந்தபுரம் கலெக்டர் வாசுகி அணிந்து வரும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
நான் சிவப்பு புடவையுடன் கலெக்டர் வாசுகி இருக்கும் வீடியோதான் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள், பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். வர்காலா நகராட்சியின் ஆர்எப்எப் எனும் ஆதார மீட்பு வசதி பிரிவு சார்பில் பேருந்து நிறுத்தம் அருகே பெற்றுக் கொண்டிருந்த பழைய புடவையை பெற்றுக் கொண்டார்.
தனக்கு தரப்பட்ட சேலையை பார்த்த அவர், எதிரே நின்று கொண்டிருந்த பெண் ஊழியர் வைத்திருந்த சிவப்பு சேலை நன்றாக இருக்கவே, மஞ்சள் புடவையைக் கொடுத்து, சிவப்பை பெற்றுக் கொண்டார்.
இதைப் பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இது குறித்து கலெக்டர் வாசுகி கூறும்போது, ”அங்கு பெற்ற பழைய சிவப்பு புடவையைக் கட்டி கொண்டு வார்காலா சிவகிரியில் ஆலோசனை கூட்டத்துக்கு வந்துள்ளேன்.
பயன்படுத்திய பொருட்களை மீண்டும் பயன்படுத்துவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் இந்த புடவையைக் கட்டியுள்ளேன்.
யாரோ ஒருவர் அணிந்த புடவையை அணிவதில் எனக்கு எந்த சங்கடமோ, கூச்சமோ இல்லை. புடவைகளும் பிளாஸ்டிக் போன்றுதான். கட்டிய புடவைகளை தூக்கி வெளியே எறிந்தால், அது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும்.
இந்த புடவையை நான் இன்னும் 15 ஆண்டுகளுக்குப் பயன்படுத்துவேன்” என்றார்.
வாசுகியின் முகநூலில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை 5 லட்சத்து 78 ஆயிரத்து 408 பேர் இதுவரை பார்த்துள்ளனர்.