30 ஆண்டுகளுக்கு பின்னர் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் பாலோ ஆன் செய்த அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதே சிட்னி மைதானத்தில் 1986ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின் போதும் இந்தியா ஃபாலோ ஆன் செய்தது குறிப்பிடத்தக்கது.

india

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறாது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 622 ரன்கள் எடுத்த இந்திய அணி டிக்ளே செய்தது. இதில் சதம் கடந்து புஜாரா 193 ரன்களும், ரிஷ்ப பண்ட் 159 ரன்களும் எடுத்து அசத்தினர்.

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்களை அதிரடி பந்து வீச்சு மூலம் இந்திய பவுலர்கள் மிரட்டினர். ரன் எடுக்கமுடியாமல் திணறிய ஆஸ்திரேலிய அணி 300 ரன்கள் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் குல்தீப் யாதவ் 5விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். இறுதியாக 322ரன்கள் பின்னிலையில் உள்ள அஸ்திரேலியா அணிக்கு பாலோ ஆன் அளிக்கப்பட்டது. இதேபோன்று 1986ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் தேதி இதே சிட்னி மைதானத்தில் விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு பாலோ ஆன் அளித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் 2வது முறையாக இந்திய அணியிடம் அதே மைதானத்தில் தற்போது ஆஸ்திரேலியா பாலோ ஆன் பெற்றுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா அதன் சொந்த மண்ணில் பாலோ ஆன் பெறாமல் விளையாடி வந்த நிலையில், அந்த அணிக்கு பாலோ ஆன் வழங்கிய அணி என்ற பெருமையை கோலி தலைமையிலான இந்திய அணி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் இந்த போட்டி மிக முக்கியத்துவம் வாய்ந்தது என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளது.