
டில்லி
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின் அருண் ஜெட்லி வீடு திரும்பி உள்ளார்.
டில்லி எய்ம்ஸ் மருத்தவமனையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதை ஒட்டி அவர் மூன்று வாரங்கள் மருத்துவமனையில் தங்கி இருந்தார். அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
வீடு திரும்பிய அருண் ஜெட்லி, “இல்லம் திரும்பியதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 3 வாரங்களாக என்னை கவனித்துக் கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மருந்தாய்வாளர்களுகு எனது நன்றிகள். நான் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்த எனது நலம் விரும்பிகள், உடன் பணி புரிவோர், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel