டில்லி

ன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட காத்திருப்பு பட்டியலில் உள்ளோர் இனி ரெயிலில் பயணிக்கலாம் என உச்சநீதிமன்ற உறுதி செய்துள்ளது.

ஆன்லைன் மூலம் ரெயில் ட்க்கட் வாங்கி காத்திருப்போர் பட்டியலில் இருப்போருக்கு இருக்கை உறுதி ஆகவில்லை எனில் தற்போது ரெயிலில் பயணம் செய்ய முடியாது.   ரெயில்வே கவுண்டரில் டிக்கட் வாங்கி உறுதி ஆகாதோர் ரெயிலில்  பயணிக்க முடியும்.   இது குறித்து பயணிகள் சார்பில் ஒரு வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கில் டில்லி உயர்நீதிமன்றம், ”காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஆன்லைன் டிக்கட் வைத்திருப்போர் உறுதி ஆகவில்லை எனினும் கவுண்டரில் டிக்கட் வாங்கியவர்களைப் போல் ரெயிலில் பயணம் செய்யலாம்.   பயணிகள் யாரும் வரவில்லை எனில் இவர்களுக்கு அந்த இருக்கை அல்லது படுக்கையை உறுதி செய்யலாம்” என தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து ரெயில்வே நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.     அந்த வழக்கு இருமுறை விசாரணைக்கு வந்தது.   இருமுறையும் ரெயில்வே தரப்பில் வழக்கறிஞர் வரவில்லை.    இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு  டில்லி உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்துள்ளது.   அத்துடன் ரெயில்வேயின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.