சென்னை கோபாலபுரம் இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடி வரும் கருணாநிதியை ராஜாத்தி அம்மாள் ஜெ. அன்பழகன்,
உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 95வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் அவர் பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ன.

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் இன்று கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து ட்விட்டரில் ”கருணாநிதி 100 ஆண்டு காலம் மேல் வாழ்ந்து எங்களை வழி நடத்துவார்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

 

 

மேலும் சென்னை கோபாலபுர இல்லத்தில் ராஜாத்தி அம்மாளும் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த புகைப்படங்களும் வெளிவந்துள்ளன. கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கோபாலபுர இல்லத்தில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.