வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை மீண்டும் குறிப்பிட்ட தேதியில் சதிக்க உள்ளதாக வெள்ளை மாளிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டு தலைவர்களும் இம்மாதம் 12ம் தேதி சந்திக்க உள்ள நிலையில் அதனை டிரம்ப் ரத்து செய்தார். இந்நிலையில் வடகொரியாவின் தூதுவரான கிம் யோங்-சோல் அந்நாட்டு அதிபர் அளித்த கடிதத்தை டிரம்பிடம் வழங்கினார். சிங்கப்பூரில் நடக்க இருந்த உச்சி மாநாட்டில் கொரிய போரை நிறுத்த கொரிய அதிபருக்கு அறிவுறுத்த டிரம்ப் எண்ணினார்.
ஆனால் சில காரணங்களால் இவர்களது சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அதே தேதியில் இருநாட்டு தலைவர்களும் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது வட கொரியா அணு ஆயுத திட்டங்களை திரும்ப பெறும் பட்சத்தில் அந்நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்க முயற்சிக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய வடகொரிய அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கொரிய அதிபரிடம் இருந்து வந்த கடிதம் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்