திருவாரூர்:

சட்டமன்றத்தில் பங்கேற்பது குறுத்து ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று ஸ்டாலின் கூறினார்.

 

திருவாரூரில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் இன்று நடந்தது.

இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ‘‘ ஊழலில் திளைக்கும் மத்திய மாநில அரசுகளை வீட்டிற்கு அனுப்பும் போரில் வெற்றி காண்போம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்டது.

சட்டமன்றத்துக்கு தி.மு.க. செல்ல தயாராக உள்ளது. சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்பது எம்எல்ஏ.க்கள். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்’’ என்றார்.