திருவனந்தபுரம்:
18 வயது பெண்ணும், 19 வயது ஆணும் சேர்ந்து வாழ கேரளா உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
திருமணத்திறகு அப்பாற்பட்டு தங்களது வாழ்க்கை துணையை தேர்வு செய்து கொள்ள உரிமை உள்ளது என்று நீதிபதிகள் சித்தம்பரேஷ், ஜோதிந்திரநாத் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
கேரளா ஆழப்புழா மாவட்டத்தை சேர்ந்த 18 வயது நிரம்பிய ஆணும், 19 வயது நிரம்பிய ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மகளை காணவில்லை என்றும், அந்த வாலிபர் தனது மகளை சிறை வைத்துள்ளார் என்றும், மகளை மீட்டு தர வேண்டும். திருமண வயது வந்தவுடன் அந்த வாலிபருக்கு மகளை திருமணம் செய்து கொடுக்கிறோம் என்று பெண்ணின் பெற்றோர் ஆட்கொனர்வு மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
ஆட்கொனர்வு மனு என்பது ஜோடிகளை பிரிப்பதற்கு கிடையாது. அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ உரிமை உள்ளது. திருமண வயது வந்த பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். முன்னதாக கடந்த மாதம் திருமண வயதை அடையாத ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.