மும்பை
ஐசிஐசிஐ வங்கியின் தலைமை அதிகாரி சந்தா கோச்சாரை காலவரையற்ற விடுமுறையில் செல்லுமாறு வங்கி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஐசிஐசிஐ தலைமை அதிகாரியாக பதவி வகிப்பவர் சந்தா கோச்சார். கடந்த 2012ஆம் ஆண்டு இவர் விடியோகோன் குழுமத்துக்கு ரூ.3250 கோடி கன வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஐசிஐசிஐ வங்கியின் தலைமை அதிகாரி சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் நூபவர் ரென்யூவபில் என்னும் நிறுவனத்தை நடத்தி வந்தார். அதில் வீடியோகோன் அதிபர் வேணுகோபால் தூத் ரூ.64 கோடி முதலீடு செய்தார்.
அந்த முதலீடு செய்த சில மாதங்களில் ஐசிஐசிஐ வங்கி அவருக்கு ரூ.3250 கோடி கடன் வழங்கியது. கடன் உதவி வழங்கவே வங்கியின் தலைமை அதிகாரியின் கணவர் நிறுவனத்தில் வீடியோகோன் முதலீடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தற்போது சிபிஐ விசாரணையின் கீழ் உள்ளது.
தற்போது இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் ஐசிஐசிஐ வங்கி முதல் இடத்தில் உள்ளது. இந்த குற்றசாட்டுகளால் வங்கியின் நற்பெயர் கெடலாம் என அச்சம் எழுந்துள்ளது. எனவே சந்தா கோச்சார் மீது ஐசிஐசிஐ வங்கி விசாரணை நடத்த உள்ளது. அதனால் விசாரணை முடியும் வரை சந்தா கோச்சாரை காலவரையற்ற விடுப்பு எடுக்குமாறு வங்கி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.