நாக்பூர்

பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என தலித்துகள் அம்பேத்கார்  மீது ஆணையிட்டுஉறுதி ஏற்க வேண்டும் என குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கூறி உள்ளார்.

குஜராத் மாநில தலித் மக்களின் தலைவர் ஜிக்னேஷ் மேவானி.   இவர் கடந்த குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.   இவர் நாக்பூரில் நடந்த இளைஞர்  விழா ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்

அப்போது ஜிக்னேஷ் மேவானி,  “சமிப்பத்தில் நடைபெற உள்ள ராஜஸ்தான் தேர்தலில் தலித் வாக்குகளை பெருவதில் மும்முரமாக உள்ளது.   பாஜக சமுதாய நீதிக்கும் சமுதாய நல்லிணக்கத்துக்கு எதிராக மனு ஸ்மிரிதியை ஆதரிக்கிறது.    இதனால் தலித்துகள் மேலும் புறக்கணிக்கப்படும் அபாயமுள்ளது.

அதனால் தலித்துகள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.   அதற்காக தலித்துகள் அம்பேத்கார் பெயரில் ஆணையிட்டு பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என உறுதி ஏற்க வேண்டும்.

தலித்துகள் மட்டும் இன்றி நாட்டு மக்கள் அனைவரையும் பொய் சொல்லி பிரதமர் மோடி ஏமாற்றி உள்ளார்.   இரண்டு கோடி வேலைவாய்ப்புக்கள் உண்டாக்கி தருவதாக கூறியவர் இது வரை எத்தனை வேலைவாய்ப்புக்களை உண்டாக்கினார்?” என உரையாற்றி உள்ளார்.