ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் கோரி பாட்டியாலா நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார்.அப்போது, ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3500 கோடியை முதலீடு செய்வதற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
சட்டவிரோதமாக அளிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த அனுமதி குறித்து சிபிஐ , அமலாக்கப்பிரிவினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த அனுமதியைப் பெற்றுத் தருவதற்காக சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனம் மறைமுகமாக செயல்பட்டதாகவும், கட்டணமும் பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவரது வீட்டில் சோதனை நடந்ததோடு கைதும் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் குறிப்பிட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி பாட்டியாலா நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.