புதுச்சேரி:
முதல்வர் நாராயணசாமிக்கு அட்வான்சாக பிறந்தநாள் வாழ்த்து கூற, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, சைக்கிலேயே பயணம் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
முதலமைச்சர் நாராயணசாமிக்கு பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
புதுச்சேரியில் முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நிகழ்ந்து வரும் நிலையில், நேற்று நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி முதல்வருக்கு கிரண்பேடி அழைப்பு விடுத்தும் அதை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தார்கள்.
இந்நிலையில் வழக்கமாக ஆளுநர் மாளிகையில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட ஆளுநர் கிரண்பேடி முதலமைச்சர் நாராயண சாமியின் வீட்டுக்கு சென்றார். அவருடன் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருடன் சென்றனர்.
புதுச்சேரியில் உள்ள , எல்லையம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள நாராயணசாமியின் இல்லத்துக்கு சென்ற கிரண்பேடி, அங்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் புத்தகங்களை பார்வையிட்டும், அங்கிருந்த காமராஜர் உருவ படத்துக்கு மரியாதையும் செலுத்தினார்.
தனது வீட்டிற்கு ஆளுநர் கிரண்பேடி திடீரென வந்ததை அறிந்த முதல்வர் நாராயணசாமி உடடினயாக மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து அவரை வரவேற்றார். முதல்வருக்கு சால்வை போர்த்திய கிரண் பேடி, நாளை தங்களுக்கு பிறந்தநாள் என்பதால், இன்றே வாழ்த்து கூறுவதற்காக வந்ததாக தெரிவித்தார்.
பதிலுக்கு நாராயணசாமியும், சால்வை போர்த்தி மரியாதை செலுத்தினார். கிரண்பேடியே முதல்வர் வீட்டிற்குக்கும், சபாநாயகர் வீட்டிற்கும் சென்று வந்த நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.