
சென்னை:
ஐபிஎல் போட்டியில் 3வது முறையாக கோப்பையை வென்ற சிஎஸ்கே வீரர்கள் இன்று பிற்பகல் சென்னை வருகை தந்தனர்.
அவர்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கோப்பை வென்றுள்ள ஐபிஎல் வீரர்கள் தங்களது வெற்றி விழாவை சென்னையில் கொண்டாட விரும்புவதாக தெரிவித்திருந்தனர்.
அதன்படி, இன்று வெற்றிக்கோப்பையுடன் அவர்கள் சென்னை வந்துள்ளனர். பாதுகாப்பு கருதி சென்னை அணி வீரர்கள் பழைய விமான நிலையம் அழைத்து வரப்பட்டனர் .

Patrikai.com official YouTube Channel