டில்லி
டில்லியில் இருந்து மீரட் வரையிலான 14 வழி ஸ்மார்ட் சாலையை இன்று மோடி திறந்து வைத்தார்.
டில்லி முதல் மீரட் வரையில் சுமார் 135 கிமீ தூரத்துக்கு ஒரு ஸ்மார்ட் சலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ. 11000 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலையில் சூரிய ஒளியில் இயங்கும் மின்விளக்குகளும் மழைநீர் சேமிப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு அதி வேகமாக செல்லும் வாகனங்களுக்கு தானியங்கி முறையில் அபராதம் வழங்கும் வசதி உள்ளது.
இந்த பயணத்தின் மூலம் டில்லி – மீரட் இடையிலான 2 மணி நேரப் பயணம் 45 நிமிடங்களாக குறையும் என சொல்லப்படுகிறது. இந்த சாலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். அத்துடன் இந்த சாலையில் திறந்த வாகனத்தில் 10 கிமீ பயணம் செய்தார். சாலையின் இருபுறங்களிலும் மக்கள் திரளாக கூடி இருந்தனர்.