லக்னோ:

வீட்டில் கழிப்பிடம் இல்லாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று உத்தரபிரதேசத்தில் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரபிரதேசம் சீதாபூர் மாவட்ட கலெக்டர் அரசு ஊழியர்களுக்கு ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருக்கும் கழிப்பிடத்தை புகைப்படம் எடுத்து வரவேண்டும். அதோடு, கழிப்பிடம் கட்டிய அடையாள சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இல்லை என்றால் மே மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும். கழிப்ப்பிட சான்றிதழை சமர்பித்த பின்னரே சம்பளம் வழங்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.