வீடு என்பது நான்கு சுவர்கள் கொண்ட வெறும் கட்டடம் மட்டும் கிடையாது. ஒவ்வொருவரின் சுக, துக்கங்களை உள்ளடக்கியது. மற்றும் நமது வாழ்வில் ஜாதகம் எவ்வாறு ஒன்றி உள்ளதோ அப்படித்தான் வீட்டின் அமைப்பை வைத்து வாழ்க்கையின் முன்னேற்றத்தை கணிக்க முடியும். அதற்காகத்தான் வாஸ்து பார்த்து வாசப்படி வைப்பது ஆகும்.

ஒரு வீட்டிற்கு முன்புற வாசல், பின்புற வாசல் என இரண்டு வாசல்கள் இருக்க வேண்டும். அப்போது தான் காற்று வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும். இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமையாகவும், ஆரோக்கியமாகவும்  இருக்கச் செய்கிறது.

ஒரு சிலர் மூன்று வாசல் வைத்து வீடு கட்டுவார்கள். இதில் ஒவ்வொரு வாசலும் எந்த திசையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முடிந்த வரை கிழக்கு, மேற்கு, வடக்கு திசையில் வாசல்கள் அமைப்பது சிறப்பாக இருக்கும். தெற்கு பகுதியில் வாசல் இருப்பது எல்லா திசைக்காரர்களுக்கும் ஒத்துவராது. வீடு  கட்டும்போது  வாஸ்து பார்த்து அதனை கட்டுவது நல்லது.

தென்கிழக்கு, தென்மேற்கில் வாசல் அமைக்கக் கூடாது.

நீங்கள் வீடு வாங்கினாலும் சரி அல்லது கட்டினாலும் சரி எப்போதும் உங்கள் திசைக்கு எந்த வாசல் சிறப்பாக இருக்கும் என்பதை கவனித்து வாங்குவது வருங்கால வாழ்க்கைக்கு நல்லது.