பெங்களூரு:
தேர்தலுக்கு முன்பு அறிமுகம் செய்த 2 ரெயில்களை 5 மாதங்களுக்கு ரத்து செய்து தென்மேற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் பனஸ்வாதி- ஒசூர்- பனஸ்வாதி வழித்தடத்தில் 2 ரெயில்கள் புதிதாக கடந்த மார்ச் மாதத்தில் தென்மேற்கு ரெயில்வே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரெயில் நாளை (26ம் தேதி) முதல் அக்டோபர் 25ம் தேதி வரை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பையப்பனஹாலி மற்றும் ஒசூர் இடையிலான 48 கி.மீ. தொலைவுக்கு ரெயில் தண்டவாள சீரமைப்பு பணி நடக்கவுள்ளது என்று காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் இது ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பயணிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
ஹெபிபால்-பனஸ்வாதி-ஒசூர் வழித்தடத்தில் தினமும் 5 ஆயிரம் பேர் பயணித்து வருகின்றனர். பணிக்கு செல்வோருக்கு மிக பயனுள்ள வகையில் உள்ள ரெயில், பயணிகள் மத்தியில் குறைந்த நாட்களிலேயே பிரபலமடைந்துவிட்டது. இந்த ரெயிலை நிறுத்துவதற்கு பயணிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.