பெங்களூர்:

ரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையில் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பை தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடகாவில் நடைபெற்று முடிந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், 104 இடங்களை  பெற்ற பாஜக ஆட்சி அமைத்து. ஆனால் அவர்களின் சாமர்த்தியம் கர்நாடகாவில் செல்லுபடியாகாததால்,  நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே எடியூரப்பா பதவி விலகினார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர்   குமாரசாமி முதல்வராக பதவியேற்றார்.

அதைத்தொடர்ந்து இன்று சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்போவதாக கூறியிருந்தார். அதன்படி இன்று காலை சபை கூடியதும், சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து மதிய இடைவேளைக்கு பிறகு முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசி வருகிறார்.

கர்நாடக சட்டமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.  இதனால் இன்னும் சற்று நேரத்தில் நடக்க உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார்.

ர்நாடகவில் உள்ளார் 224 தொகுதிகளில் 222 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. அந்த சட்டசபையின் இப்போதைய பலம் 222. இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை என்பது குறிப்பபிடத்தக்கது.