பிதொராகர். உத்தர்காண்ட்
உத்தர்காண்ட் மாநிலம் பிதொராகர் என்னும் இடத்தை சேர்ந்தவர் ரமேஷ் சிங். இவருடைய அண்ணன் ராணுவத்தில் பணி புரிகிறார். இவர் பாகிஸ்தானில் வசித்து வந்த இந்திய அதிகாரி ஒருவரிடம் பணி புரிந்து வந்தார். முதலில் சமையல் வேலை பார்ப்பதற்காக வந்த அவர் மெல்லம் மெல்ல வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய ஆரம்பித்துள்ளார்.
அந்த சமயத்தில் ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவர் ரமேஷை தொடர்பு கொண்டு அதிகாரியிடம் இருந்து சில ரகசியங்களை திருடித் தருமாறும் அதற்காக அவருக்கு ப்ணம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதற்காக ரமேஷ் தனது முதலாளியான அதிகாரி வீட்டில் ஒட்டுக் கேட்டு அந்த விவரங்களை ஐ எஸ் இயக்கத்துக்கு அளித்துள்ளார். அது மட்டும் இன்றி சில முக்கிய ஆவணங்களையும் திருடி அவர்களுக்கு அளித்துள்ளார்.
பிறகு பணத்தை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு வந்து தனக்கு இருந்த ரூ.8 லட்சம் கடனையும் அடைத்துள்ளார். இவருக்கு இவ்வளவு பணம் வந்ததால் சந்தேகம் அடைந்த உள்ளூர் காவல்துறையினர் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். இவர் பாகிஸ்தானில் பணி புரிந்தவர் என்பதால் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரும் உடன் இணைந்து விசாரித்துள்ளனர்.
விசாரணையில் ரமேஷை குறித்த அனைத்து விவரங்களும் தெரிய வரவே ரமேஷ் சிங் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.