பெங்களூரு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களை கமலஹாசன் நேற்று சந்தித்துள்ளார்.

நேற்று பெங்களூருவில் மஜத கட்சி தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார்.    இந்த விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.    இவர்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனும் ஒருவர் ஆவார்.

விழாவில் கலந்துக் கொண்ட கமல் கர்நாடகாவின் முதல்வர் குமாரசாமிக்கும் துணை முதல்வர் பரமேஸ்வராவுக்கு வழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.    இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  சோனியா காந்தி ஆகியோருடன் கமல் பேசிக் கொண்டிருந்தார்.

விழாவுக்கு வந்திருந்த ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, புதுவை முதல்வர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் சீதராம் யெச்சூரி,  கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜா உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களை கமலஹாசன் சந்தித்துள்ளார்.