
சென்னை:
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் ஏற்கனவே ஒருமுறை 6 மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 மாதம் கால அவகாசம் கோரி விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24ந்தேதியுடன் முடிவடைய இருப்பதால், மேலும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாலும், ஜெ.மருத்துவ சிகிசிச்சை குறித்து ஆராய வேண்டிய திருப்பதாலும் கூடுதலாக மேலும் 6 மாதம் அவகாசம் தேவை என்று தமிழக அரசுக்கு விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி கடிதம் எழுதி உள்ளார்.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இதுவரை 50க்கும் குறைவான நபர்களிடம் மட்டுமே விசாரணை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ந்தேதி முதல்வர் எடப்பாடி அறிவித்தார்.
[youtube-feed feed=1]