டில்லி
அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்களிலும் அசைவ உணவு அளிக்கப்பட மாட்டாது என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மகாத்மா காந்தியில் 150 ஆவது பிறந்த தினம் வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி வருகிறது. இதை ஓராண்டுக்கு கொண்டட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக பிரதமர் மோடி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
காந்தி சைவ உணவுக் கொள்கையை கடைபிடித்தவர் ஆவார். அதனால் ரெயில்வே நிர்வாகம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் தேதி அன்று அனைத்து ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ரெயில்வே பணியாளர்களையும் அன்றைய தினத்தை சைவ தினமாக கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் காந்தியின் நினைவுக்காக ரெயில் டிக்கட்டுகளின் பின்னணியில் காந்தியின் புகைப்படம் அச்சடிக்கவும், அவரை நினைவு கோரும் ஓவியங்களையும் விளம்பரங்களையும் ரெயில் நிலையங்களில் அமைக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.