டில்லி:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக் கெதிரான கடைசி லீக் ஆட்டத் டில்லி அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.
இந்த சீசனில் இவர் 14 போட்டிகளில் விளையாடி 5 அரைசதம், ஒரு சதத்துடன் 684 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரே சீசனில் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். இதற்கு முன் ராபின் உத்தப்பா 2014-ம் ஆண்டில் கொல்கத்தா அணிக்காக 660 ரன்கள் அடித்திருந்தார். இதுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அத்துடன் ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றிய ஒரே விக்கெட் கீப்பர் உத்தப்பாதான்.