தராபாத்

பில் 2018 லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை  வீழ்த்தியதில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

நேற்று இரவு ஐதராபாத் ராஜிவ் காந்தி விளையாட்டரங்கில் ஐபில் 2018 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.   டாஸ் வெற்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து க்ளம் இறங்கியது.  துவக்க வீரர்கள் ஓரளவு நன்கு விளையாடிய போதிலும் அடுத்து வந்தவர்களின் ஆட்டம் சரியாக இல்லை.  ஐதராபாத் அணி 20 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 172 ரன்களை எடுத்தது.

அடுத்ததாத கொல்கத்தா அணி 173 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கியது.  துவக்க வீரர்கள் சுனில் நரேன் மற்றும் கிரிஸ் வின் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தை மற்ற வீரர்களும் தொடர்ந்தனர்.   கடைசி ஓவரில்  இரு பந்துக்கள் மீதம் உள்ள நிலையில் கொல்கத்தா அணி வெற்றி இலக்கை அடைந்தது.    இதனால் தற்போது கொகத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி அடைந்துள்ளது.