போபால்:
மத்திய பிரதேசம் மாநிலத்தில் மாட்டு இறைச்சி கொண்டு வந்தவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தில் அம்கர் கிராமத்தில் ரியாஸ் (வயது 45), ஷகீல் (வயது 33) உள்பட 6 பேர் மாட்டு இறைச்சியை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த கிராம மக்கள் பிடிக்க முயற்சித்தனர். இதில் 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். மக்களிடம் சிக்கிய ரியாஸ், ஷகீல் ஆகியோருக்கு பலத்த அடி விழுந்தது.
இதில் ரியாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஷகீல் படுகாயத்துடன் போலீசாரால் மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கிராமத்தை சேர்ந்த 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.