பெங்களூரு:

ர்நாடக சட்டமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இது பாரதியஜனதாவுக்கு அக்னி பரிட்சை என்று ஆவேசமாக பேசி  வருகிறார். மோடியின் சாதனைகளையும் பேசி எடியூரப்பா, நான் அதிகாரத்தை இழந்தால் எதையும் இழக்க மாட்டேன், எனது வாழ்க்கை மக்களுக்கு இருக்கிறது:  தனது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதையடுத்து சட்டசபையில் இருந்து வெளியேறிய எடியூரப்பா காங்கிரஸ் தலைவர்களிடம் கைகுலுக்கி விட்டு சென்றார்.

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதை யொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, கார்கே போன்ற தலைவர்கள்  சட்டசபை லாபியில் அமர்ந்து கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.