காங். முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார்

பெங்களூரு:

ர்நாடக சட்டசபையில் அனைத்து எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுள்ள நிலையில், உணவு இடைவேளை விடப்பட்டது. இந்த நேரத்தில் தலைமறைவாக இருந்த 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் சட்டசபைக்கு வந்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காங்.எம்எல்ஏ பிரதாப் கவுடா, சட்டமன்ற வளாகத்தில் மதிய உணவு அருந்தும் காட்சி

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாகவே எடியூரப்பா பதவி விலகி விடுவார் என்று கூறினார்.

காங்.எம்எல்ஏ ஆனந்த்சிங் சட்டமன்றத்திற்கு வந்த காட்சி

ஏற்கனவே காங்கிரஸ் எம்எல்ஏ பட்டீலிடம் எடியூரப்பா மற்றும் பாஜ பொறுப்பாளர் முரளிதர ராவ் ஆகியோர் பேசிய ஆடியோ இன்று மதியம் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், காணாமல் போன் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் திரும்பி வந்துள்ளனர்.

இந்நிலையில் எடியூரப்பா ராஜினாமா செய்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.