பாட்னா
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவின ஊழல் தொடர்பாக மூன்று வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் உடல்நிலை மோசமானதால் டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நிலை சீரானதும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு மகன் திருமணத்தை முன்னிட்டு பரோலில் வந்து மீண்டும் சிறைக்கு சென்றார்.
லாலுவுக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக கோளாறு உள்ளதால் அவர் ஜாமின் கோரினார். அவருக்கு 6 வார ஜாமீன் அளித்ததால் தற்போது சிறையில் இருந்து வந்து பாட்னாவில் வசித்து வருகிறார். இன்று காலை அவர் உடல்நிலை மோசமானதாக கூறப்படுகிறது. அதை ஒட்டி அவர் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.