பாவ்நகர்:

குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை  லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக  பலியாயினர். மேலும்  7 பேர் படுகாயமடைந்தனர்.

குஜராத்தில் இருந்து  பாவ்நகர் – ஆமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில், பாவால்யாலி எனும் கிராமம் வழியாக சிமென்ட் மூட்டைகளை ஏற்றி  சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, இன்று அதிகாலையில் விபத்துக்குள்ளானது. லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் லாரியில் பயணம் செய்து வந்த தொழிலாளர்கள் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக வும், மேலும் 7 பேர் காயத்துடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்விபத்து நடந்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.