பெங்களூரு:

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது. நாளை மாலை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டும்படி கர்நாடகா கவர்னர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவை அவர் நியமனம் செய்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கர்நாடக காவல்துறை உயரதிகாரிகள் இன்று மாலை அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினர். சட்டமன்றம் வரும் எம்.எல்.ஏ.க்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது

[youtube-feed feed=1]