டில்லி:

ர்நாடக விவகாரத்தில் இன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அபிஷேகக் சிங்வி தெரிவித்து உள்ளார்.

எடியூரப்பாவை பதவி ஏற்க கவர்னர் அழைத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் நாளை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் ஆஜரான, அக்கட்சி மூத்த தலைவர் அபிசேக் சிங்வி கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று கூறினார்.

மேலும், நாங்கள்  24 மணி நேரத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு தயார் என கூறினோம். ஓட்டெடுப்பில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு என்று தெரிவித்தா. ஆனால், எடியூரப்பா அளித்த கடிதத்தில், எவ்வாறு ஆட்சியமைக்க உரிமை கோருகிறேன் என்ற விவரம்  தெரிவிக்கப்படவில்லை என்றார்.

மேலும், கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக ஆங்கிலோ இந்தியன் ஒருவரை நியமனம் செய்ய கவர்னர் மேற்கொண்ட  முயற்சிக்கும்  தடை விதிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

உச்சநீதி மன்றத்தில் தீர்ப்பை பெரும்பாலான அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின்  அரசியலமைப்பு அறநெறி மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இது கொண்டாடப்பட வேண்டிய தீர்ப்பு இதுதான்.

உச்சநீதி மன்றத்தின் மீதான  மக்கள் நம்பிக்கை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]