டில்லி:
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.40 கோடி அளவிலான குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க தடை இல்லை என்று, தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்.
குட்கா ஊழல் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், தமிழக சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் (குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்) மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி இன்றைய விசாரணையின்போது, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற உள்ளது.