
பெங்களூரு
கலாச்சாரக் காவலர்கள் என அழைக்கப்படும் இந்து அமைப்பினரான முத்தலிக் மற்றும் ஸ்ரீராம் சேனா ஆகியோர் கர்நாடக தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளனர்.
இந்து அமைப்பினரான முத்தலிக் மற்றும் ஸ்ரீராம் சேனா ஆகியோர் கலாச்சாரக் காவலர்கள் என தங்களை அழைத்துக் கொள்கின்றனர். நமது கலாச்சாரத்துக்கு எதிராக உள்ளதாக பல பழக்கங்களையும், விழாக்களையும் எதிர்த்து நாடெங்கும் இவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலில் இவர்கள் முதல் முறையாக 40 தொகுதிகளில் களம் இறங்கினார்கள்.
பாஜகவுக்கு எதிராக மாறி உள்ள சிவசேனா கட்சி இவர்களுக்கு தனது முழு ஆதரவையும் அளித்தது. இந்த அணிக்கு ஆதரவளிப்பதன் மூலம் சிவசேனா பாஜகவுக்கு எச்சரிக்கை விடுக்க நினைத்தது. ஆனால் இந்த அணியின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் ஒரு இடத்தில் கூட ஆயிரம் வாக்குகளை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முழுக்க முழுக்க மத சார்பை மட்டுமே முன் நிறுத்தி பிரச்சாரம் செய்த இந்த அணிக்கு கர்நாடக மக்கள் கடும் தோல்வியை அளித்துள்ளனர். இந்த அணிக்கு பகல்கோட் மாநிலத்தில் உள்ள ஹுன்குண்ட் தொகுதியில் அதிகபட்சமாக 922 வாக்குகள் பெற்று ஐந்தாம் இடம் கிடைத்துள்ளது. ஹெப்பல், ஹாசன், ஹுப்ளி போன்ற தொகுதிகளில் இந்த அனிக்கு இரு இலக்க அளவிலேயே வாக்குகள் கிடைத்துள்ளது.
[youtube-feed feed=1]