சென்னை
எடப்பாடி பழனிச்சாமியை நீக்கி விட்டு தன்னை முதல்வராக்க பாஜகவிடம் ஓ பன்னீர்செல்வம் விண்ணப்பம் அளித்துள்ளாரா என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.
கர்நாடக தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியது. பாஜக இந்த தேர்த்லில் அதிக இடங்களைப் பெற்றுள்ளது. தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இதற்காக பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் பாஜகவின் கர்நாடக வெற்றியை, “பாஜகவின் பிரம்மாண்டமான தென் இந்திய நுழைவு” என புகழ்ந்திருந்தார்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், “ஓ பன்னீர்செல்வம் பாஜகவின் பிரம்மாண்டமான தென் இந்திய நுழைவு என எதைக் குறிப்பிட்டுள்ளார்? அவர் இந்தித் திணிப்பை வரவேற்கிறாரா? காவிரி ஆணையம் அமைக்காததை வரவேற்கிறாரா? அல்லது எடப்பாடி பழனிச்சாமியை நீக்கி விட்டு தன்னை முதல்வராக்கும் படி விண்ணப்பம் அளித்துள்ளாரா? என கிண்டலாக கேள்வி எழுப்பி உள்ளார்