ஜ்ஜைனி

த்திய பிரதேச பிரசாரக் குழுத் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா பாஜக ஊழலை பரவலாக்கி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி நகரில் நேற்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்று நிகழ்ந்தது.  இதில் மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா கலந்துக் கொண்டார்.    இந்தப் பொதுக்கூட்டத்தை இந்தப் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விவசாயிகளும் இளைஞர்களும் இணைந்து நடத்தினர் .   பொதுக்கூட்டத்தில் சிந்தியா சிறப்புரை ஆற்றினார்.

அவர் தனது உரையில், “ஒரு காலத்தில் ராஜிவ் காந்தி அரசுப் பணிகளை பரவலாக்கினார்.   அரசின் அனைத்து மட்டங்களிலும் பொறுப்பை பகிர்ந்தார்.   தற்போதைய மோடி அரசு ஊழலை பரவலாக்கி உள்ளது.  அரசின் அனைத்து மட்டங்களிலும் ஊழல் நிரம்பி உள்ளது.  இதனால் ஏழைகளுக்கு உணவு கிடைப்பதில்லை, விவசாயிகளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை,  முதியோருக்கு உதவித் தொகை கிடைபதில்லை.   இதற்காக பாஜக கவலைப்படுவதும் இல்லை.

மக்களுக்கு கனவுகளை அளித்து விட்டு தங்கள் பைகளில் பணத்தை நிரப்பிக் கொள்வதே அரசின் கொள்கை ஆகி விட்டது.    பிரதமர் தாம் ஊழல் செய்வதில்லை,  ஊழல் செய்ய அனுமதிப்பதும் இல்லை என கூறி வருகிறார்.   அவர் ஒரு முறை மத்தியப் பிரதேசத்துக்கு வந்து இங்கு நடப்பது என்ன என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

முதல்வர் நர்மதா சேவா யாத்திரை செய்வதாக கூறி வருகிறார்.   ஆனால் அது நர்மதா ஆய்வு யாத்திரை ஆகும்.  பகலில் நர்மதை ஆற்றில் உள்ள மணல் வளங்களை யாத்திரை செய்து ஆய்வு செய்து விட்டு இரவில் அதை கொள்ளையுடும் மணி நடைபெறுகிறது.     நாட்டை பாஜக அரசு 14 வருடங்களில் பாழாக்கி விட்டது.  மாநிலம் எங்கும் பலாத்கார குற்றங்கள்,  குழந்தைகள் இறப்பு விகிதங்கள் அதிகரித்துள்ளன.” என குறிப்பிட்டுள்ளார்.