டில்லி
தேனா வங்கியை வாடிக்கையாளர்களுக்கு புதிய கடன்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும் தற்போது வாராக்கடன் அதிகமாகி வருகிறது. அவைகளில் பலவற்றுக்கு ஈடாக உள்ள சொத்துக்களை விட கடன் அதிகமாக உள்ளதால் வங்கிகள் பெருமளவில் இழப்பை பெற்று வருகிறது. அத்துடன் இந்த வாராக்கடன்களால் வங்கிகளில் பல நிதி பற்றாக்குறையால் நிர்வாகச் செலவுகளைக் கூட எதிர்கொள்ள முடியவில்லை. பல ஏடிஎம்கள் இதனால் மூடப்பட்டு வருகின்றன.
பொதுத்துராஇ வங்கிகளில் ஒன்றான தேனா வங்கி சென்ற ஆண்டில் ரூ. 1255 கோடி இழப்பு அடைந்துள்ளது. இந்த வருடம் முடிவடைந்த மூன்று மாதங்களில் ரூ.575.2 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக வங்கியின் வரவு செலவு கணக்கு தெரிவிக்கின்றது. இதற்கு முந்தைய காலாண்டில் இந்த வங்கி ரூ.380.1 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. வரும் காலாண்டில் இது மேலும் அதிகரிக்கும் என வங்கி தெரிவித்துள்ளது.
அதை ஒட்டி ரிசர்வ் வங்கி தேனா வங்கி புதிய கடன்கள் எதையும் அளிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிய பணியாளர்கள் யாரையும் இந்த வங்கி பணி அமர்த்தக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்த வங்கியின் வாராக்கடன் தொகை ஈடாக அளிக்கப்பட்ட சொத்துக்களை விட 22.4% அதிகம் உள்ளதாக வங்கியின் சென்ற வருடக் கணக்கு தெரிவிக்கிறது. இந்த வங்கிக்கு வாராக்கடன் ரூ.16361.4 கோடிகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.