வசதி படைத்த லெஸ்பியன் பெண்களுக்காக பள்ளி மாணவிகள் கடத்தப்படுவதாக ஒரு தகவல் பரவி நாகை மாவட்டமே அதிர்ந்து கிடக்கிறது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பள்ளியில் 10 மற்றும் 9- ம் வகுப்பு படித்துவரும் மாணவிகள் இருவரை கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் காணவில்லை. காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இது குறித்த விசாரணையில்தான் “லெஸ்பியன்” கடத்தலா என்ற கேள்வி எழுந்து அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
இந்த சம்பவத்தில் முழுக்க முழுக்க குற்றம்சாட்டப்படுவது 10-ம் வகுப்பு மாணவி எக்ஸ்தான். (பெயரைத் தவிர்க்க எக்ஸ் என குறிப்பிட்டுள்ளோம்.)
இவர் குறித்து நாகை வட்டாரத்தில் விசாரித்தோம்.
“மாணவி எக்ஸ் படிப்பது பத்தாம் வகுப்புதான். ஆனால் அவளது செயல்பாடுகள் அதிரவைக்கும். பள்ளிக்கூட வகுப்பறையிலேயே சக மாணவிகளை கட்டிப்பிடிப்பது’, முத்தம் கொடுப்பது என்று அவளது நடவடிக்கைகள் ஒரு மாதிரியானவை” என்கிறார்கள்.
மேலும், “மாணவி எக்ஸ், தனக்கு பிடித்த மாணவிகளை அடிக்கடி ஏ.சி.ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அசைவ உணவுகள் வாங்கித்தருவது, திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வது என்று தாளாரமாக பணத்தை செலவு செய்வது அவளது வழக்கம். ஆனால் அந்த அளவுக்கு எக்ஸ் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் கிடையாது. எங்களுக்கு என்னவோ எக்ஸ் லெஸ்பியன் வகை கேரக்டராக இருக்கலாம் என்று யூகிக்கிறோம்.
ஏற்கெனவே சில மாணவிகளை எக்ஸ், செக்ஸ் வலையில் வீழ்த்த… அப் பெண்களின் பெற்றோர் கடுமையாக கண்டித்ததும் நடந்திருக்கிறது.
மேலும் சென்னையில் செல்வாக்குள்ள இளம் பெண் ஒருவரிடம் எக்ஸ் நெருக்கமாக இருப்பதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.
இதற்கிடையே லெஸ்பியன் வலையில் அப்பாவி மாணவிகளை ஈடுபடுத்தி வசதி படைத்த ஒரு பெண்கள் கூட்டம் உல்லாசமாக இருப்பதாகவும் ஒரு தகவல். இவர்களுக்கு எக்ஸ் போன்ற மாணவிகள் ஏஜெண்ட் போல் செயல்பட்டு வருவதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.
அத்துடன், ஏற்கனவே இதே பள்ளியில் படித்த, எக்ஸ்-ன் நெருக்கமான இரு மாணவிகள் லெஸ்பியன் தொடர்பால் வீட்டை விட்டு வெளியேறியதும். அவர்களை திருப்பூரில் இருந்து காவல்துறையினர் மீட்டதும் நடந்திருக்கிறது” என்றார்கள்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.
அவர்கள், “’எக்ஸூக்கு ‘லெஸ்பியன்’ தொடர்பு மற்றும் மது அருந்துதல் உள்ளிட்ட பல பழக்கங்கள் இருந்திருக்கின்றன. இதில் அப்பாவி மாணவி ஒருவரையும் அழைத்துக்கொண்டு எங்கோ சென்றுவிட்டார். தற்போது சில முக்கிய தகவல்கள் கிடைத்திருக்கிறது. காணாமல் போன மாணவிகளை விரைவில் கண்டுபிடிப்போம்” என்றார்.