சேலம்:

ழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு கோடை விழா இன்று தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

ஏழைகளின் ஊட்டி என்றும், மலைகளில் அரசன் என்றும் அழைக்கப்படும்  சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 43-வது கோடை விழா இன்று கோலாகலமாக தொடங்கியது  மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்,  ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் நினைவு வளைவுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதைத்தொடர்ந்து மலர் கண்காட்சியை பார்வையிட்டார். இந்த ஆண்டு மலர் கண்காட்சியில், தமிழக தலைமைச் செயலம், விமானம், கிரிக்கெட் வீரர் போன்று மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதை முதல்வர் கண்டு ரசித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வருடன் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன், துரைக்கண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பொதுவாக 3 நாட்கள் நடைபெறும் இந்த மலர் கண்காட்சி இந்த ஆண்டு  5 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அத்துடன்   படகுப்போட்டி, நாய் கண்காட்சி, சிறுவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், உள்ளிட்டவை நடைபெற இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.