திருப்பதி
சாமி தரிசனம் செய்ய திருப்பதி வந்துள்ள பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு கடும் எதிர்பு கிளம்பி உள்ளது.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் கட்சியினர் பாஜக அமைச்சரவையில் இருந்து விலகினர். மேலும் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தெலுங்கு தேசம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் போராட்டத்தால் கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடர் முழுவதுமாக முடங்கிப் போனது.
இந்நிலையில் திருப்பதி ஸ்ரீ ஏழுமலையானை தரிசிக்க பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா திருப்பதி வந்துள்ளார். அவருக்கு அங்கே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது தெலுங்கு தேசம் கட்சியினர் அமித்ஷாவின் வருகையை எதிர்த்து கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.