சென்னை

ர் ஆசியா நிறுவனத்தின் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏர் ஆசியா விமான நிறுவனம் உள் நாட்டு விமான சேவைகளில் 4 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.

பெங்களூரு, புவனேஸ்வரில் இருந்து சென்னை வந்து செல்லும் 4 ஏர் ஆசிய விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமானங்களில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் ஆசியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் பயணிகள் கடும் துயருக்குள்ளாகி இருக்கின்றனர்.