மும்பை:
மகாராஷ்டிரா பாலஸ்-கதேகாவுன் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த எம்எல்ஏ பதாங்ராவின் மகன் விஷ்வஜீத் போட்டியிடுகிறார்.
பாஜகவும் வேட்பாளரை அறிவித்துள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மறைந்த பதாங்ராவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது மகனுக்கு ஆதரவு ஆதரவு அளிக்கப்படுகிறது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.