மதுரை:
நடிகர் ரஜினிகாந்தின் காலா படத்தின் பாடல் பிரமாண்டமாக வெளியிட்ட நிலையில், அரசியல், நதிநீர் இணைப்பு குறித்து ரஜினிகாந்த் பேசினார். தொடர்ந்து தனது மன்ற நிர்வாகிகளுடன் மன்ற மாநாட்டை நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜுவிடம், செய்தியாளர்கள் ரஜினியின் நதிநீர் இணைப்பு ஆட்சியை பிடிக்க இருப்பதாக பேசியது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர், நதி நீர் இணைப்பு குறித்த ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன் என்று கூறினார். ஆனால், காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாமே ஆட்சியை பிடிக்க முடியாது என்று கூறினார்.
அமைச்சரின் ஆச்சியை பிடிக்கலாம் என்ற பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆச்சி என்பது செட்டிநாட்டு பெண்களிடையே புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தை. இந்த வார்த்தையை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருப்பது பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த செட்டிநாட்டு பெண்களை செல்லூர் ராஜு இழிவுபடுத்தி விட்டார் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.