கொல்கத்தா
ஐபிஎல் 2018 போட்டிகளில் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை மும்பை அணி 102 ரன்கள் வித்யாசத்தில் தோற்கடித்துள்ளது.
நேற்று ஐபிஎல் 2018 போட்டிகளின் லீக் ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கில் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடியில் 6 விக்கெட்டுகள் இழந்து 210 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி 211 ரன்கள் என்னும் வெற்றி இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை ஒட்டி மும்பை இந்தியன்ஸ் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.